தமிழ்நாடு

பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

DIN

சென்னை: சென்னை தியாகராய நகர், ஜி.என். செட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற கோயிலான திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்மாக, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. 

இதேபோன்று, சென்னை முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையிலும் ஒரு வெங்கடேசப்பெருமாள் கோயில் உள்ளது.

திருப்பதிக்குச் சென்று பெருமாளைத் தரிசிக்க இயலாதவர்கள் கூட தியாகராய நகரில் உள்ள வெங்கடசேப் பெருமாள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிப்பதுண்டு. திருப்பதியைப் போல் இயங்கும் நாள்தோறும் கூட்டம் அலைமோதும். 

விசேஷ நாள்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துச் செல்வதுண்டு. இவரிடம் வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா. 1970-80-களில் தமிழ், தெலங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர். 

இவர் தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானமாக எழுதிக் கொடுத்தார். 

இந்த இடத்தில்தான் 14,880 சதுர அடியில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் பத்மாவதி தாயாருக்கு  ராஜகோபுரம், பிரகாரம், முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டு முடிக்கப்பட்டுள்ளது. 

இந்த கோயிலில் வெள்ளிக்கிழமை காலை (மார்ச் 17) விமான கோபுரம், ராஜகோபுரத்தில் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து 10 மணி முதல் 12 மணி வரை பத்மாவதி தாயார்-சீனிவாசா பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 

11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்விக், பரிச்சார்கா மர்யாடா போன்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

பத்மாவதி தாயாரை தரிசிக்க காலை 11 மணிக்கு பிறகே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணி வரை அன்னதானம் வழங்கப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT