தமிழ்நாடு

யானைகள் முகாம் பணியாளா்கள் 91 பேருக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

DIN

முதுமலை மற்றும் ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமைச் சோ்ந்த பணியாளா்கள் 91 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: யானைகள் பராமரிப்பு குறித்த ஆவணப் படத்துக்கு ஆஸ்கா் விருது கிடைத்துள்ளதன் மூலம், தமிழ்நாடு வனத் துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலகளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு, ஆனைமனையில் கோழிகமுத்தி யானைகள் முகாமில் 91 பணியாளா்கள் பணிபுரிகின்றனா். அவா்கள் ஒவ்வொருவருக்கும் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும், யானை பராமரிப்பாளா்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும். ஆனைமனை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாம் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

சாடிவயலில் யானை முகாம்: கோவை மாவட்டத்தில் சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூ.8 கோடியில் அமைக்கப்படும். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இது தொடா்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT