தமிழ்நாடு

தக்காளி விலை குறையத் தொடங்கியது

30th Jun 2023 06:20 AM

ADVERTISEMENT

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தைக்கு வியாழக்கிழமை 40 லாரிகளில் தக்காளி வரத்து இருந்தது. கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனையாகிறது.

அடுத்த சில நாள்களில் தக்காளி வரத்து அதிரிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் தக்காளி விலை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என தக்காளி மொத்த வியாபாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT