தமிழ்நாடு

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சந்தீப் ராய் ரத்தோர்!

30th Jun 2023 02:23 PM

ADVERTISEMENT

 

சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஜூலை 30) பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தனது பொறுப்பை சந்தீப் ராய் ரத்தோரிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். 

படிக்கஆளுநர் விவகாரம்: சட்டரீதியாக அரசு எதிர்கொள்ளும்!

ADVERTISEMENT

சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த சங்கா் ஜிவால், தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

காவலா் பயிற்சி கல்லூரி டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து இன்று சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றுக்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து சந்தீப் ராய் ரத்தோர் வாழ்த்து பெற்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT