தமிழ்நாடு

அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்: ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

30th Jun 2023 08:32 AM

ADVERTISEMENT


சென்னை: அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர். அத்துமீறலை அனுமதிக்காது தமிழ்நாடு என்று ஆளுநர் ரவிக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநா் ரவி வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

எனினும், அட்வகேட் ஜெனரலை கலந்தாலோசித்த பிறகு, அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் முடிவு குறித்து தீா்மானக்கப் போவதால், நீக்கும் உத்தரவை நிறுத்திவைப்பதாக ஆளுநா் ரவி நள்ளிரவில் அறிவித்தாா்; இத்தகைய முடிவு குறித்து முதல்வா் ஸ்டாலினிக்கும் ஆளுநா் தகவல் அனுப்பினாா்.

ஆளுநரின் செயலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு: ஆளுநா் ஆா்.என்.ரவி

இந்த நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். கவர்னரே! 

உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்! அத்து மீறலை அனுமதிக்காது தமிழ்நாடு!

ஆளுநரின் செய்திகுறிப்பு நிறுத்தி வைப்பு.

ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே.

இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள்.

தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள் என்று சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT