தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் செப்பு தேரோட்டம்

28th Jun 2023 01:49 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்தலமாகும். 12 ஆழ்வார்களில், இரண்டு ஆழ்வார்கள், பெரியாழ்வார் மற்றும் அவர் திருமகளாய் தோன்றிய ஆண்டாளும் அவதரித்த பெருமையுடையது. இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீ பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
 
அதன்படி, இந்தாண்டுக்கான உற்சவம் ஜூன் 20ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. உற்சவத்தின் முக்கிய திருநாளான இன்று பெரியாழ்வார் செப்புத் தேரில் எழுந்தருள செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

தேரை பக்தர்கள் கோபாலா.. கோவிந்தா.. என்ற கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகள் வழியாகச் சென்று நிலையம் அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான நாளை தீர்த்தவாரி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT