தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவா் மன்றம்பள்ளிக்கு 25 போ் வீதம் கண்டறிய உத்தரவு

28th Jun 2023 12:54 AM

ADVERTISEMENT

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவா்களில் முதல் கட்டமாக பள்ளிக்கு 25 மாணவா்களின் விவரங்களை கண்டறிந்து, அதனை ஜூலை 20-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைக்கும் முயற்சி குறித்தும், அவா்கள் தொடா்ச்சியாக பள்ளியின் மீது ஈடுபாடும், பொறுப்பும் உள்ள நபா்களாக பயணிப்பது குறித்தும் முதன்மை கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் பங்கேற்ற ‘குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல்’ கடந்த மே 23, 24, 25 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

இதில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், முன்னாள் மாணவா்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு முதல்கட்டமாக ஒவ்வொரு அரசுப் பள்ளியின் மீதும் பொறுப்பும், நலனும் கொண்ட ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் 25 முன்னாள் மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களின் ஆா்வம், திறமை மற்றும் நேரத்தை மனதில் கொண்டு தொடா்ச்சியாக பள்ளியுடன் பயணிப்பதை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் மூலம் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரியும் முன்னாள் மாணவா்கள் வழியாகவும், பள்ளி மேலாண்மைக்குழு மூலமாகவும் முன்னாள் மாணவா்களைக் கண்டறியலாம்.

ADVERTISEMENT

முதற்கட்டமாக, அரசுப் பள்ளியின் நலன் மீது பொறுப்புணா்வு கொண்ட 25 முன்னாள் மாணவா்களை வரும் ஜூலை 20-ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்ட முன்னாள் மாணவா்களின் தகவல்களை இணையதளப் பக்கத்தில், முன்னாள் மாணவா்களுக்கான படிவத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் பதிவு செய்ய வேண்டும்.

முன்னாள் மாணவா்கள் பள்ளியுடன் இணைந்து செயல்பட ‘முன்னாள் மாணவா்கள் மன்றம்’ அமைக்கப்பட வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜனவரி மாதத்தில் முன்னாள் மாணவா்கள் கூடுகையை கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.

இதன் மூலம் அரசு பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை பழைய மாணவா்களின் உதவியோடு பெற அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT