தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை: முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

28th Jun 2023 09:28 AM

ADVERTISEMENT


புதுச்சேரி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மனித குலத்தின் சிறப்புகளில் ஈகைப் பண்பும் ஒன்று. அது பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்கலும், அத்துன்பத்தைப் போக்க முயல்வதும் ஆகும். தன்னலும் கருதாத இந்தச் செயலே ஈகைப் பண்பாகப் போற்றப்படுகிறது. 

இதையும் படிக்க | நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் அனுமதி!

ADVERTISEMENT

இத்தகைய ஈகைப் பண்பால் மக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டுச் சிறப்புகள் இத்தகைய பண்டிகைகள் மூலம் வெளிப்பட்டு நிற்பதைக் காண முடிகிறது. 

ஈகைப் பண்பையும் மனித நேயத்தையும் முன்னிறுத்தும் அதே வேளையில், தன்னலம் கருதாத் தியாகத்தின் மூலம் பரிபூரண இறையருளைப் பெற முடியும் என்பதையும் உலகிற்கு எடுத்துரைக்கும். இந்த பக்ரீத் நன்னாளில் இறைத்தூதர் முகமது நபிகளின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, அவர் உலகிற்குப் போதித்த அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற உறுதியேற்போம் என்று கூறி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT