தமிழ்நாடு

அரசு விழாவில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரம்: திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

18th Jun 2023 09:51 PM

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியரை தள்ளிவிடும் அளவுக்கு திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கிற்கும், நிர்வாக அமைப்புக்கும் முழுப் பொறுப்புடையவர் மாவட்ட ஆட்சியர், அத்தகைய மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு இந்த ஆட்சியில் திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது, 

மாவட்ட ஆட்சியரேயே தள்ளி விட்டவர் மீது  ஏன் இன்னும்நடவடிக்கை இல்லை, இதுவே ஜெயலலிதாவின் அரசாக இருந்திருந்தால் இப்படி நடைப் பெற்றிருக்குமா?

எதேச்சதிகாரத்தில் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்கும் இந்த அரசை மக்கள் துணை கொண்டு விரட்டியடிக்கின்ற காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பான விடியோ ஒன்றையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். 

ADVERTISEMENT

இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT