தமிழ்நாடு

நடிகர் விஜய் பேச்சு: எடப்பாடி பழனிசாமி பதில்!

18th Jun 2023 12:55 PM

ADVERTISEMENT

 

ஜனநாயக நாட்டில் அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உள்ளது என நடிகர் விஜய் பேச்சு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக - காங்கிரஸ் கட்சிதான். 

அதிமுக யாருக்கும் அடிமையில்லை. கொள்கை அடிப்படையில் மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம்.  கொள்கை அடிப்படையில்தான் கூட்டணியே தவிர அதிமுக யாருக்கும் அடிமையில்லை. திமுகதான் தற்போது அடிமை கட்சியாக செயல்படுகிறது என விமர்சித்தார். 

ADVERTISEMENT

மேலும், ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்ற நடிகர் விஜய்யின் பேச்சு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT