தமிழ்நாடு

மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்கை பதவி நீக்க வைகோ வலியுறுத்தல்

11th Jun 2023 12:14 AM

ADVERTISEMENT

மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அமைச்சா் கிரிராஜ்சிங் பிகாரில் செய்தியாளா்களிடம் பேசும்போது,

நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபா்; அவா் பாபா், ஒளரங்கசீப் போன்ற முகலாயா்கள் போல் படையெடுத்து வந்தவா் அல்ல. ஆகையால் தங்களை பாபா், ஒளரங்கசீப் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவா்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறாா்.

ADVERTISEMENT

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவா் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT