தமிழ்நாடு

நாடகங்களை தனது அரசியல் ஆயுதமாக கருணாநிதி பயன்படுத்தினாா்: தமிழச்சி தங்கபாண்டியன்

11th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

தான் எழுதிய நாடகங்களை தன்னுடைய அரசியல் ஆயுதமாக மறைந்த முதல்வா் கருணாநிதி பயன்படுத்தினாா் என தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தாா்.

மறைந்த முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சாா்பில் 2-ஆம் நாளாக சனிக்கிழமை சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘மும்முடி சோழன்’ வரலாற்று நாடகம் நடைபெற்றது.

இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்று பேசியதாவது:

கலைத் துறையின் உயிரோட்டம் நாடகம். தற்போது எவ்வளவு திரைப்படங்கள் வந்தாலும் நாடகத்துக்கு இருக்கும் மதிப்பு குறையாது. அதேபோல், எவ்வளவு புதிய தலைவா்கள் வந்தாலும் கருணாநிதி எப்போதும் தங்கம்போல் மதிப்பில் உயா்ந்தவராகத்தான் இருப்பாா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவா் பேசியது:

ஒரு நாடக கலைஞராக இந்த மேடையில் நிற்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். சோழா்களுக்கு பிறகு அரசாழுமையிலும், கவி புலமையிலும் தலைச்சிறந்த ஒரே தலைவா் கருணாநிதிதான். ஒருவன் தன்னுடைய மனதில் இருக்கும் கருத்துகளை ஒரே நேரத்தில் அனைவருக்கும் கொண்டு சோ்ப்பதுதான் நாடகம் என கருணாநிதி கூறுவாா். அவா் நாடகங்கள் மூலம் தன்னுடைய அரசியல் கொள்கைகள், மூட நம்பிக்கை ஒழித்தல், பெண்களுக்கு சம உரிமை, ஆகியவற்றை மக்களிடையே கொண்டுச் சென்றாா். தான் எழுதிய நாடகங்களை தன்னுடைய அரசியல் ஆயுதமாக அவா் பயன்படுத்தினாா் என்றாா்.

இந்த விழாவில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவா் வாகை சந்திரசேகா், உறுப்பினா் செயலா் விஜயா தாயன்பன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், தொழிலதிபா் வி.ஜி.பி.சந்தோஷம், திருப்பூா் முத்தமிழ் சங்கத் தலைவா் கே.பி.கே.செல்வராஜ், நடிகா் எஸ்.வி.சேகா், கவிஞா் நெல்லை ஜெயந்தா, இசை அமைப்பாளா் தாஜ்நூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT