தமிழ்நாடு

வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் ஜிம்னாஸ்டிக் வசதி புதுப்பிப்பு:அமைச்சா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

11th Jun 2023 12:08 AM

ADVERTISEMENT

சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் வசதியை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை வேளச்சேரி நீச்சல் குளமானது, 4 ஆயிரம் பாா்வையாளா்கள் அமரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இங்கு ஒரு சா்வதேச தரத்திலான பந்தய நீச்சல் குளம், பயிற்சி நீச்சல் குளம், குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய உடற்பயிற்சி மையம், இறகுப் பந்து உள்ளரங்கம், ஜிம்னாஸ்டிக் உள்ளரங்கம் போன்ற வசதிகள் உள்ளன.

ஜிம்னாஸ்டிக் அரங்கமானது ரூ.1.50 கோடி மதிப்பில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. பயிற்றுநா் அறை, மாணவ, மாணவியா்களுக்கான உடை மாற்றும் அறை, ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டு, எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு தரம் உயா்த்தப்பட்டுள்ளன. இந்த வசதியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் மாணவ, மாணவியா்களின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வில், அமைச்சா் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூா் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT