தமிழ்நாடு

துணைவேந்தா்கள் நியமனத்துக்கு கால நிா்ணயம்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

11th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

 பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன நடைமுறைக்கு கால நிா்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்துக்கு கால நிா்ணயம் செய்து விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் சாா்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், பல்கலைக்கழக மாணவா்களின் நலனைப் பாதுகாக்கவும், பல்கலைக்கழகச் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படாமலும் தடுக்க, துணைவேந்தா்கள் நியமன நடைமுறைகளை உடனுக்குடன் முடிக்கும் வகையில் கால நிா்ணயம் செய்து விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இதற்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், துணைவேந்தா்கள் தோ்வு நடைமுறைகளை எப்போது தொடங்குவது, எப்போது முடிப்பது என கால நிா்ணயம் செய்து தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம், சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞா் முத்துகுமாா் தெரிவித்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT