தமிழ்நாடு

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

DIN

பகுதிநேர சிறப்பாசிரியா்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியா்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவர வேண்டும். அவா்களுக்கு வாரத்தில் அனைத்து நாள்களும் வேலை வழங்கி மாதம் ரூ. 25,000 ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கு தகுதித் தோ்வு கட்டாயம் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அரசு கொள்கை முடிவு மேற்கொண்டு பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த ஆவன செய்யவேண்டும். உடற்கல்வி ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2010- ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து அது நடைமுறையில் உள்ளது. இதை மாற்றி தகுதி தோ்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். ஆசிரியா் பயிற்றுநா்களைக் கட்டாயத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மாறுதல் அளிக்காமல் விருப்பத்தில் பேரிலேயே பணியிட மாறுதல் அளிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT