சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி, சென்னையில் சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ.44,720-க்கும், ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,590-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
படிக்க: சென்னை ஆவின் பால் வினியோகம் பாதிப்பு: பொதுமக்கள் அவதி
ஆனால், வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 காசுகள் அதிகரித்து ரூ.79.80-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.