தமிழ்நாடு

சாலைப்பணிகள் தாமதம்: கால்நடைகளுடன் பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டம்          

10th Jun 2023 11:23 AM

ADVERTISEMENT

 

சாலைப்பணிகள் தாமதம்: கால்நடைகளுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்                

ஈரோடு: ஈரோடு அருகே தாமதாமாக நடைபெற்று வரும் சாலை பணிகளால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக கூறி பொதுமக்கள் கால்நடைகளுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு விடிய விடிய  காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், அரச்சலூர், ஊதங்காடு பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் சங்கர். இவர் திமுகவில் வார்டு செயலாளராக இருந்து வருகிறார்.  அரச்சலூர் பேரூராட்சியின் சார்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊதங்காடு பகுதியில் தார் சாலை சீரமைப்பு பணிகளானது தொடங்கபட்டது.

ADVERTISEMENT

ஆனால்  பணிகள் முழுமை பெறாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தான் சாலையை கடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.        

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சங்கர் என்பவர் தனது கால்நடைகளுடன் வெள்ளிக்கிழமை மாலை   செல்ல முயற்சி  போது சாலை பணியை எடுத்த கான்ட்ராக்டர் ஊரை சுற்றி செல்லுமாறும் பணிகள் மெதுவாக நடக்கும் என்றும் கூறி உள்ளார்.  

இதனால்  சங்கர் மற்றும் அப்பகுதியினை சேர்ந்த சிலர்  அரச்சலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு  வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கால்நடைகளுடன் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.    

 பேரூராட்சி தலைவரிடம் இதுகுறித்து தெரிவித்தும் சாலை பணிகளுக்காக எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உடனடியாக அப்பகுதியில் சாலை பணிகளை முடித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.      

விடிய விடிய போராட்டம் நடந்த நிலையில் சனிக்கிழமை காலை பேரூராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து சனிக்கிழமை காலை 9 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT