தமிழ்நாடு

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பில் நியாயமான நடவடிக்கை:  அமைச்சர் முத்துசாமி 

10th Jun 2023 01:22 PM

ADVERTISEMENT

 

ஈரோடு: கீழ்பவானி கால்வாய் சீரமைப்பில்  நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் வீட்டு வசதித்துறை  அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதன் ஒரு அங்கமாக ஈரோடு கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12,000 மரக்கன்றுகள் நடப்படுகிறது. 

இந்த நிகழ்வினை ஈரோடு வெளிவட்ட சாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். 

ADVERTISEMENT

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டத்தில், நியாயப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இரு தரப்பு விவசாயிகளும் ஒத்துப்போக வேண்டும். மனம் திறந்து பேசினால் பிரச்சனை தீரும். யாரையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் உடன்பாடு எட்டப்பட வேண்டும். 

இரண்டு தரப்பு விவசாயிகளும் மனம் திறந்து பேச வேண்டும். அவ்வாறு பேசினால் பிரச்சனை தீரும். அமைச்சர் துரைமுருகன் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிலேயே 90 சதவீதம் பிரச்னைகள் தீர்ந்துள்ளது.  

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. திட்டத்தில் உள்ள 1,045 குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்த பிறகே, திறப்பு விழா நடைபெறும்.

முதல்வர்  அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைப்பார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

நிகழ்வில் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வி.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT