தமிழ்நாடு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

10th Jun 2023 10:17 AM

ADVERTISEMENT

 

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முதல் யூனிட்டில் மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டாவது யூனிட், இரணாடாவது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதைச் சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT