தமிழ்நாடு

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து இல்லை: பள்ளி கல்வித் துறை விளக்கம்

10th Jun 2023 02:44 PM

ADVERTISEMENT

 

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்று பரவும் தகவல் உண்மையில்லை என பள்ளி கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. 

பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் ஜூன் 12ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனையொட்டி பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு பள்ளி கல்வித் துறை பரிசீலித்து வருவதாக தகவல் பரவியது.

ADVERTISEMENT

இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில்,  பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்று பரவும் தகவல் உண்மையில்லை என்றும் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்றும் பள்ளி கல்வித் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT