தமிழ்நாடு

கோவையிலிருந்து சுற்றுலா சென்ற பேருந்தில் சினிமா பாணியில் கொள்ளை

DIN

கோவை : கோவையிலிருந்து காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றவர்களின் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த உடமைகள், சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர், சந்திராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 28ஆம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி, சாய்பாபா கோவில்  உள்ளிட்ட பல ஆன்மீக தளங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றுள்ளனர். பின்னர்  7ஆம் தேதி தேதி இரவு  ஒரிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு  சென்றுவிட்டு, அங்குள்ள தங்கும் விடுதி அருகே நின்ற போது, பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்திருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து பேருந்திலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவர் ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும் உடமைகளைத் திருடியதும் பதிவாகியிருந்தது.

 இது குறித்து சுற்றுலா சென்றுள்ள சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறியதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 நாள் ஆன்மீக சுற்றுலாவாக வட மாநிலங்களுக்குச் சென்றோம் காசி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்றுவிட்டு ஒரிசாவிலிருந்து குஜராத் மாநிலத்தில் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் எங்களுடன் வந்திருந்த 10 பேரின் உடைமைகளை கொள்ளையடித்துள்ளனர்.

குஜராத்தை அடைந்ததும் தங்கும் விடுதிக்கு சென்றபோதுதான் உடமைகள் பறிபோனது தெரிய வந்தது.  மேலும் துணிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் தான் இது போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறோம். தற்போது நாங்கள் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வழக்கமாக வட மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறி வைத்து ஓடும் லாரியில் ஏறி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடைபெறும் நிலையில் சுற்றுலா சென்ற பேருந்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT