தமிழ்நாடு

மதுபான விலையைக் குறைக்க வேண்டும்: சித்தராமையாவுக்கு வந்த கடிதம்

10th Jun 2023 03:43 PM

ADVERTISEMENT


மங்களூரு: மதுப் பிரியர்களுக்கான அமைப்பு ஒன்று, ஏழை தொழிலாளர்களின் நலன் கருதி உள்ளூர் மதுபானங்களின் விலையைக் குறைக்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

விரைவில் மதுபானத்துக்கான வரி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், கர்நாடக முதல்வரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு ஒரு கோரிக்கைக் கடிதம் வந்துள்ளது.

அதன்படி, ஏராளமான மதுப்பிரியர்கள், ஜாதி, மத, பொருளாதார பேதங்களைக் கடந்து குடிப்பதை தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், பல்வேறு கொண்டாட்டங்களின்போதும் மதுபானம் வழங்கப்படுகிறது. மாநில அரசின் முக்கிய வருவாயாகவும் உள்ளது. இந்த நிலையில், மதுபானங்களின் விலையை உயர்த்துவது என்று முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த முடிவு ஏழைத் தொழிலாளர்களைக் கடுமையாக பாதிக்கும். 

ஏழை கூலித் தொழிலாளர் ஒரு நாளைக்கு வெறும் 180 மி.லிட்டர் மதுபானம் குடிக்க வேண்டும் என்றால் கூட கிட்டத்தட்ட ரூ.200 - 250 வரை செலவு செய்ய நேரிடுகிறது. எனவே, வரியை உயர்த்தினால் ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குடிக்கும் மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுளள்து.

ADVERTISEMENT

இந்த மின்னஞ்சல், பல்வேறு அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT