தமிழ்நாடு

கடையநல்லூர் அருகே யானை மிதித்து காவலாளி பலி!

10th Jun 2023 08:44 AM

ADVERTISEMENT

கடையநல்லூர்: யானை தாக்கியதில் காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.

சொக்கம்பட்டி கருப்பாநதி அணை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் வேல்துரை(28). இவர் கடையநல்லூர் கல்லாற்று பகுதியில் உள்ள நொண்டியார் தோப்பு பகுதியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். 

கடந்த மாதம் 16 ஆம் தேதி இரவு இவரை யானை தாக்கியதாம். இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.

ADVERTISEMENT

கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT