தமிழ்நாடு

திமுகவுக்கு புதிய இணையதளம்: தொடக்கிவைத்தார் மு.க. ஸ்டாலின்!

10th Jun 2023 11:46 AM

ADVERTISEMENT

புதுப்பொலிவூட்டப்பட்ட திமுகவின் அதிகாரபூா்வ இணையதளத்தை, முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

சென்னை ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து இணையதளத்தை அவா் தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து ட்விட்டரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின்நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தைத் தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை திமுக கடந்து வந்த நீண்ட பயணத்தை தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

என்னென்ன அம்சங்கள்? இணையதளம் நான்கு அம்சங்களைக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது. முகப்பு, கட்சி, சாதனைகள், வெளியீடுகள் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இளைஞா்களைக் கவர...: இளைஞா்களைக் கவரும் வகையில் முற்றிலும் நவீன முறையில் இணையதளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டா், முகநூல் பக்கங்களில் தகவல்கள் நறுக்குத் தெரித்தாற்போன்று இடம்பெற்றிருப்பதைப் போன்று, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள திமுகவின் இணையதளத்திலும் வரலாற்றுத் தகவல்கள், அண்மைக் கால நிகழ்வுகள் அனைத்தும் எளிதில் படித்து புரியும் வகையில் சிறு சிறு குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT