தமிழ்நாடு

அவிநாசி அருகே பூச்சி மருந்தால் கருகிய விளைபொருள்கள்: விவசாயி வேதனை

DIN

அவிநாசி அருகே தண்டுக்காரம்பாளையத்தில் பூச்சி மருந்தை மாற்றிக் கொடுத்ததால், பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடிகள் முற்றிலும் கருகியதால், விவசாயி வேதனையடைந்துள்ளார்.

அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி குமாரபாளையம் பிள்ளையார் கோயில் தோட்டத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (73). பிரதான விவசாயத்தை தொழிலாளக் கொண்டுள்ள இவர், தனது தோட்டத்தில் காலிஃப்ளவர் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் பூச்சி மருந்தை மாற்றிக் கொடுத்ததால், பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடி முற்றிலும் கருதி நாசமாகியதால், வேதனையடைந்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது- எனது தோட்டத்தில் அரை ஏக்கரில் சுமார் 6 ஆயிரம் காலிஃபிளவர் நாற்றுக்கள் பயிரிட்டிருந்தேன். 90 நாளில் சாகுபடி ஆகும் காலிஃபிளவர், பயிரிட்டு 60 நாளை கடந்ததும் செடியில் புழு விழுந்தது. உடனடியாக, காலிஃப்ளவர் செடியின் இலைகளை பறித்துக் கொண்டு, ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தனியார் பூச்சி மருந்து கடைக்கு சென்று விபரம் கூறி பூச்சி மருந்து வாங்கி வந்தேன். 

ஆனால் அந்த மருந்தை வாங்கி வந்து தெளித்த 4 நாள்களுக்குள் செடி அனைத்தும் கருகி விட்டது.  காலிஃப்ளவரும் அடுத்த கட்ட வளர்ச்சி அடையவில்லை. 6 ஆயிரம் நாற்றுகள் பயிரிட்டதில், ஆயிரம் காலிஃப்ளவர் கூட மீதமாகது. ஒரு காலிஃப்ளவர் ரூ.40 க்கு வியாபாரிகள் தோட்டத்திலேயே வந்து கொள்முதல் செய்வார்கள். இப்படி பூச்சி மருந்தை மாற்றிக் கொடுத்ததால், செடிகள் அத்தனையும் கருதி, ரூ.2 லட்சத்துக்கு மேல் வீணாகியது. 

முழு வளர்ச்சி அடையாத காலிஃப்ளவர்.

இதுபோல வேறு எந்த விவசாயியும் பாதிக்கக்கூடாது. இது குறித்து வேளாண்மை துறையினர் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும், தனியார் மருந்து விற்பனையாளர் மீது நுகர்வோர் நீதிமன்றம், காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாகவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT