தமிழ்நாடு

விதவை சான்றிதழ் வழங்குவதில் கொடுமை... முதல்வர் நிரந்தர தீர்வுகாண வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

10th Jun 2023 02:53 PM

ADVERTISEMENT

 

விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன்.

மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஒரு வயது கைக்குழந்தையோடு வந்த பெண் கலங்கிய கண்களோடு சொன்னார்.

ADVERTISEMENT

“விதவை சான்றிதழுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகிவிட்டது. அலையாய் அலைகிறேன். கிடைக்கவில்லை” என்று. அதிகாரிகள் ஏதேதோ காரணம் சொன்னார்கள்.

அந்த பெண்ணுக்கு சான்றிதழ் கொடுக்காமல் முகாமை முடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். இரவு 7 மணிக்கு சான்றிதழை கொடுத்து முகாமை முடித்தோம்.

விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT