தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் குறித்து அமித்ஷா விளக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் 

DIN

மதுரை எய்ம்ஸ் குறித்து அமித்ஷா விளக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சேலத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு அவர் பேசியதாவது, 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை மக்கள் அகற்றிவிட்டு அதனை நம்மிடம் வழங்கியுள்ளனர். திமுக ஆட்சியை வீழ்த்தவே முடியாது என்ற நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இனி இந்த மண்ணில் திமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் சேலத்தில் பெருவாரியாக வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும். 
அடுத்த ஆண்டுதான் நாடாளுமன்றத் தேர்தல் என திமுகவினர் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர இருக்கிறது. அதற்கு திமுகவினர் தயாராக இருக்க வேண்டும். பாஜகவின் செல்வாக்கு நாடு முழுவதும் சரிந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டியே மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்பதை சென்னைக்கு வரும் அமித்ஷா பட்டியலிட வேண்டும். 
பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் நிலையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது ஏன்?. மதுரை எய்ம்ஸ் குறித்து அமித்ஷா விளக்க வேண்டும். மத்திய அரசு செய்தது இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு மட்டுமே.  தேர்தல்களில் தோல்வி மேல் தோல்வி கண்ட கட்சி அதிமுக. சசிகலாவின் காலை வாரிவிட்டு பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி ஆட்சி நடத்தியவர் பழனிசாமி.
காலத்தின் சூழல் மாறிவிட்டது. சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை மக்களிடம் சேர்க்க வேண்டும். திமுக ஆட்சி தொடர்பாக பொய்யாக பரப்பும் தகவல்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும். அதிமுகவில் ஒருவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் வெள்ளத்தில் அதிமுக-பாஜக அடித்துச் செல்லப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT