தமிழ்நாடு

மூன்றே நாள்களில் 121 குழந்தைகளை மீட்க உதவிய தொழில்நுட்பம்

DIN


சென்னை: காணாமல் போன குழந்தைகளை மீட்கும் சிறப்பு நடவடிக்கையில், தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும்  காணாமல்போன 121 குழந்தைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மூன்றே நாள்களில் அதாவது ஜூன் 7ஆம் தேதி  முதல் 24 ஆண் குழந்தைகள், 97 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் தொழில்நுட்பம் பெரிய அளவில் உதவியதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

அதாவது, காணாமல் போன குழந்தைகளின் விவரங்களை காவல்துறை சிறப்புக் குழு, அந்தந்த பகுதி குற்றப்பதிவுத் துறை அதிகாரிகள் மற்றும் புகார் அளித்த குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் பெற்றனர். 

பிறகு, செல்லிடப்பேசி தொழில்நுட்பம், செல்லிடப்பேசி கோபுரத்திலிருந்து சிக்னல் கிடைத்த விவரம், செல்லிடப்பேசி அழைப்புகளின் பதிவுகள் மட்டுமல்லாமல், சில சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய, இதுபோன்ற தொழில்நுட்பங்களுடன், வங்கிப் பணப்பரிமாற்றங்கள் ஏடிஎம்களில் இருக்கும் கேமரா ஆகியவற்றின் மூலமும் பல குழந்தைகள் இருக்கும் இடங்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 1883 குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பதாகவும், அதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 435 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்களை கடத்தல் கும்பல்கள் கடத்திச் சென்று பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே திட்டம் முதலில் பிப்ரவரி மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது மட்டும் 1,080 குழந்தைகளை ரயில் நிலையங்களில் பிச்சையெடுக்கும் தொழில் செய்து வந்த போது ரயில்வே காவல்துறையினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சென்னை டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநிலம் முழுவதும் காணாமல்போன குழந்தைகளை மீட்கும் சிறப்பு நடவடிக்கை கடந்த 7-ஆம் தேதி முதல் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த மாநகர காவல்துறை, மாவட்ட காவல்துறை சாா்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அளவிலான அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் கீழ் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த சிறப்பு நடவடிக்கை விளைவாக இதுவரை 24 ஆண் குழந்தைகள், 97 பெண் குழந்தைகள் என மொத்தம் 121 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா். இந்த குழந்தைகள், அவா்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT