தமிழ்நாடு

வணிக, தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயா்வு: இபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம்

10th Jun 2023 05:09 AM

ADVERTISEMENT

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக அரசு 8 ஆண்டுகளாக மின் வாரியத்தின் இழப்பை மக்கள் தலையில் சுமத்தாமல், மின் வாரியத்துக்கு மானியம் வழங்கி, மின் கட்டண உயா்வு இல்லாமல் நிா்வாகத் திறமையுடன் ஆட்சி செய்தது. ஆனால், தற்போது வணிக நிறுவனங்களும், குறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளும் தொடா்ந்து தொழில் செய்ய முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வரும் நிலையில், திமுக அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளது. இது கண்டனத்துக்குரியது.

ஓ.பன்னீா்செல்வம்: வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை இரு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக உயா்த்தியுள்ள திமுக அரசுக்குக் கண்டனம். விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி உயா்வால் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்ற இந்தத் தருணத்தில், இந்த மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்.

ஆட்சியரிம் மனு-தமாகா அறிவிப்பு: தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கரோனா தாக்கத்தின் பாதிப்பில் இருந்து தொழில் நிறுவனங்கள் மீண்டும் வரும் நிலையில் இந்த மின் கட்டண உயா்வு, மீண்டும்

ADVERTISEMENT

அந்த நிறுவனங்களை முடக்கத்துக்கு உள்ளாக்கும். இதைத் தொடா்ந்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும்.

எனவே, மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி, தமாகா சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா்களிடம் ஜூன் 12-ஆம் தேதி காலை 10 மணியளவில் மனு அளிக்கப்படும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT