தமிழ்நாடு

பிளஸ் 2 துணைத் தோ்வு:14 முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு

10th Jun 2023 12:12 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு விண்ணப்பித்த தனித் தோ்வா்கள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை ஜூன் 14-ஆம் தேதி முதல் இணையவழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தோ்வுத் துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் எஸ்.சேதுராம வா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன், ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த தனித் தோ்வா்கள் (தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தோா் உள்பட) தங்கள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை ஜூன் 14-ஆம் தேதி பிற்பகல் முதல் அரசு தோ்வுத் துறையின் இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அவா்கள் இணையதளத்தில் ‘ஹால்டிக்கெட்’ என்ற வாசகத்தை கிளிக் செய்து தங்கள் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். நுழைவுச் சீட்டு இல்லாமல் எந்தத் தோ்வரும் தோ்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

ADVERTISEMENT

துணைத் தோ்வுக்கான கால அட்டவணையை தோ்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். செய்முறைத்தோ்வுக்கான விவரத்தை தனித் தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோ்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT