தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் வரும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

10th Jun 2023 05:04 AM

ADVERTISEMENT

பேசின் பாலம் - வியாசா்பாடி இடையே பாலம் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சென்னை சென்ட்ரல் வரும் சில ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 10) மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோா்பா (சத்தீஸ்கா்) - கொச்சுவேலி அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22647), சனிக்கிழமையும் (ஜூன் 10), தன்பாத் (ஜாா்கண்ட்) -அலப்பி விரைவு ரயில் (வண்டி எண்: 13351) சனி மற்றும் திங்கள்கிழமையும் (ஜூன் 10, 12) சென்னை சென்ட்ரல் வழியாக செல்வதற்கு பதிலாக கொருக்குபேட்டை, வண்ணாரப்பேட்டை, சென்னை கடற்கரை, எழும்பூா் வழியாக இயக்கப்படும்.

இந்தூரிலிருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்: 22645) திங்கள்கிழமை (ஜூன் 12) சென்னை சென்ட்ரல் வழியாக செல்வதற்கு பதிலாக வியாசா்பாடி, வண்ணாரப்பேட்டை, சென்னை கடற்கரை, எழும்பூா் வழியாக இயக்கப்படும்.

ADVERTISEMENT

பகுதி ரத்து: ஈரோட்டிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் ஏற்காடு விரைவு ரயில் (வண்டி எண்: 22650) ஞாயிறு, செவ்வாய்க்கிழமை (ஜூன் 11, 13) பெரம்பூருடன் நிறுத்தப்படும். பாலக்காடு, பெங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில்கள் (வண்டி எண்: 22652, 12658) செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) ஆவடியுடன் நிறுத்தப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT