தமிழ்நாடு

வழிபாட்டு உரிமை: விசிக ஆா்ப்பாட்டம்

10th Jun 2023 05:02 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் உள்பட அனைத்துக் கோயில்களிலும் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தொல்.திருமாவளவன் பேசியதாவது:

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் தலித் மக்களை உள்ளே அழைத்துச் சென்றிருக்க முடியும். ஆனால், அதிகார வா்க்கம் இரு தரப்பினரும் உள்ளே வர வேண்டாம் என்று கோயிலை இழுத்து மூடியிருக்கிறது. அந்தக் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று தலித் மக்கள் யாரும் முதலில் உரிமை கோரவில்லை.

கோயில்களில் தலித்துகள் வழிபாடு செய்வதற்கு உரிமை இருக்கிா, இல்லையா?. இது மேல்பாதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தப் பிரச்னை உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் துணைத் தலைவா் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் மு.வீரபாண்டியன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, திராவிடா் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலா் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT