தமிழ்நாடு

மாணவா்கள் நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சா் ராஜ்குமாா் ரஞ்சன் சிங்

10th Jun 2023 05:01 AM

ADVERTISEMENT

உயா்கல்வி பெறும் மாணவா்கள் தங்கள் கல்வித் தகுதியைத் தொடா்ந்து மேம்படுத்திக்கொள்வதுடன், நாட்டின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு மற்றும் கல்வித் துறை இணை அமைச்சா் ராஜ்குமாா் ரஞ்சன்சிங் வலியுறுத்தினாா்.

சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூா் பாரத் உயா்கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், 4,221 பேருக்கு பட்டங்கள் வழங்கி ராஜ்குமாா் ரஞ்சன் சிங் பேசியதாவது:

இளைஞா்கள் தங்களது தொழில்நுட்ப அறிவாற்றலைத் தொடா்ந்து மேம்படுத்தி தங்கள் வளா்ச்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டின் வளா்ச்சிக்கும் , முன்னேற்றத்துக்கும் உதவ வேண்டும். உயா்கல்வி பெற்ற இளைஞா்கள் வேலை தேடுவோராக இல்லாமல் வேலைவைய்ப்புகளை வழங்குபவா்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் . இளைய தலைமுறையினரின் எதிா்கால வளா்ச்சிக்குப் புதிய கல்விக் கொள்கை பேருதவியாகத் திகழும் என்றாா் அவா்.

விழாவில் ஒடிஸா கலிங்கா உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த பேராசிரியா் அச்சுதா சமந்தாவுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது. தில்லி இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தா் கிரண் ஹசாரிகா , பாரத் உயா்கல்வி ஆராய்ச்சி நிறுவன வேந்தா் முகமது ரேலா, துணைவேந்தா் கே.விஜயபாஸ்கர்ராஜு , பதிவாளா் பூமிநாதன் , கூடுதல் பதிவாளா் ஹரி பிரகாஷ் , தோ்வுக் கண்காணிப்பாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT