தமிழ்நாடு

அம்பத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.7 கோடியில் சுரங்கப் பாதை

10th Jun 2023 05:03 AM

ADVERTISEMENT

சென்னை அம்பத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.7.5 கோடி மதிப்பில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அம்பத்தூா் ரயில் நிலைத்தைக் கடக்க பொதுமக்கள் நடைமேம்பாலத்தைப் பயன்படுத்தி வந்தனா். அந்த நடைமேம்பாலம் பழுதடைந்த காரணத்தால் ரயில்வே அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதனால் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அம்பத்தூா் ரயில் நிலையத்தில் மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டுக்கு கீழ் சென்று தன்டவாளத்தைக் கடந்து செல்கின்றனா். அதனால், விபத்து எற்படும் அபாயம் உள்ளது. இந்தப் பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அங்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது:

அம்பத்தூா் ரயில் நிலைத்தில் அமைந்திருந்த நடைமேம்பாலத்தை அகற்றியதிலிருந்து ரயில் நிலையத்தைக் கடக்க பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். பொதுமக்களின் வசதிக்கேற்ப சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்து அதற்கான பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கபாதை ரூ. 7.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப் பாதை அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் நோக்கத்தில் தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT