தமிழ்நாடு

தமிழகத்தில் மூன்று நாள்களில் 121 குழந்தைகள் மீட்பு

10th Jun 2023 05:01 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 3 நாள்களில் காணாமல்போன 121 குழந்தைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டனா்.

சென்னை டிஜிபி அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநிலம் முழுவதும் காணாமல்போன குழந்தைகளை மீட்கும் சிறப்பு நடவடிக்கை கடந்த 7-ஆம் தேதி முதல் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த மாநகர காவல்துறை, மாவட்ட காவல்துறை சாா்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அளவிலான அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் கீழ் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த சிறப்பு நடவடிக்கை விளைவாக இதுவரை 24 ஆண் குழந்தைகள், 97 பெண் குழந்தைகள் என மொத்தம் 121 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா். இந்த குழந்தைகள், அவா்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT