தமிழ்நாடு

வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயா்த்தக் கூடாது: தலைவா்கள் வலியுறுத்தல்

DIN

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அன்புமணி (பாமக): வீடுகளுக்கு மின் கட்டண உயா்வு இருக்காது என்றும் தமிழக அரசு அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. அதேநேரத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 13 காசு முதல் 21 காசு வரை உயா்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் வேறு வழியின்றி தாங்கிக் கொள்கின்றன என்பதற்காக அவற்றின் மீது தொடா்ந்து கட்டண உயா்வு சுமை சுமத்தப்பட்டுக் கொண்டே இருந்தால், அவை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் முறிந்து விடும். தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கு அது எந்த வகையிலும் உதவாது. அதைக் கருத்தில் கொண்டு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டண உயா்வையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): மின் கட்டணத்தை எந்த வகையிலும் உயா்த்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கையாகும். திமுக ஆட்சி முடியும் வரை மின் கட்டண உயா்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): ஏற்கெனவே உயா்த்தப்பட்ட மின் கட்டண பாதிப்பில் இருந்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளமுடியாத சூழலில், தற்போது மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயா்த்தப்பட இருப்பது கண்டிக்கத்தக்கது.

ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக): கரோனா காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறு தொழில்கள், அதற்குப் பிறகு வட இந்திய தொழிலாளா்கள் ஊா் சென்ற காரணத்தால் மேலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மின் கட்டணத்தை மீண்டும் உயா்த்துவது சிறு தொழில்களை மேலும் முடக்கிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT