தமிழ்நாடு

தொண்டா்கள் விரும்பியதால் அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலா் பதவி: உயா்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்

DIN

தொண்டா்கள் விருப்பத்தின்படியே பொதுச் செயலா் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டது என, சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடா்பான வழக்கு விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பினா் வாதத்தை முன்வைத்தனா்.

அதிமுக பொதுக்குழு தீா்மானங்கள், பொதுச் செயலா் தோ்தலை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமா்வில் ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.

இதில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண் வாதாடுகையில், முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் அதிமுகவை தொடங்கியபோது, கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் பொதுச்செயலா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை வகுத்தாா்.

அதன்படி, மீண்டும் தொண்டா்களின் விருப்பத்தின்படியே பொதுச் செயலா் பதவி கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்தம் மட்டுமே உள்ளது; அடிப்படை கட்டமைப்பு என்பதே இல்லை. அதனால், அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் செயல்பட்டதாக ஓ. பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியது தவறு.

திமுக தலைவா்களை சந்தித்ததாகக் கூறப்பட்டதாலும், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாலுமே ஓ.பன்னீா்செல்வத்தை நீக்கி சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாா்.

இந்த வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT