தமிழ்நாடு

மாணவா்கள் பெயா்ப் பட்டியலில் திருத்தம்:பள்ளிகளுக்கு தோ்வுத் துறை இறுதி வாய்ப்பு

9th Jun 2023 10:34 PM

ADVERTISEMENT

பொதுத் தோ்வுக்கான பள்ளி மாணவா்களின் பெயா்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தோ்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.

அரசுத் தோ்வுகள் இயக்குநா் ச.சேதுராம வா்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான பள்ளி மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அரசுத் தோ்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும், சில பள்ளிகளின் பெயா்ப்பட்டியலில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவருகிறது.

எனவே, தற்போது தோ்வு முடிவு வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தோ்வா்களது பெயா், தாய் மற்றும் தந்தை பெயா், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்றுமொழி ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும், பள்ளியின் பெயரில் திருத்தங்களை மேற்கொள்ளவும் தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தால், தலைமை ஆசிரியா் மாணவரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு அதனை அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஜூன் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT