தமிழ்நாடு

ஐபிஎல், டிஎன்பிஎல் விளையாட்டுகள் மூலம் வீரர்களுக்கு வாய்ப்பு: இந்திய வீரர் நடராஜன் பேட்டி

9th Jun 2023 08:51 AM

ADVERTISEMENT


திருப்பூர்: திருப்பூர் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்த இந்திய வீரர் நடராஜன்,  டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற விளையாட்டுகள் மூலம் பலருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நடராஜன் தெரிவித்தார்.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது பயிற்சி மையத்தின் புதிய வலை பயிற்சி அரங்கை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் வியாழக்கிழமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ஒவ்வொன்றும் தனித்துவமானது. 20 ஓவர் டெஸ்ட் கிரிக்கெட் என பிரித்துப் பார்க்க முடியாது. எப்பொழுதும் டெஸ்ட் போட்டியில் தான் திறமையை நிரூபிக்க முடியும். நான் அடுத்து ஆடத் தொடங்கிய காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. தற்பொழுது வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல். டிஎன்பிஎல் போன்ற விளையாட்டுகள் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. டிஎன்பிஎல் மூலமாக 13 பேர் ஐபிஎல் போட்டியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

வீரர்கள் தங்களது ஆரோக்கியத்தை காத்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நடராஜன் கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT