தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

9th Jun 2023 08:15 AM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணைக்கு  வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,040 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் மழை  குறைந்ததன் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,178 கன  அடியிலிருந்து 1,040 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.59  அடியிலிருந்து 103.54 அடியாக குறைந்துள்ளது.

ADVERTISEMENT

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.50 டிஎம்சியாக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT