தமிழ்நாடு

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை

DIN

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் பயன்பாட்டு நடைமுறைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும், அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்வது தொடர்பாகவும் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் வனத்துறையுடன்  இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (9.6.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும், அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்வது தொடர்பாகவும் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, மற்றும் வனத்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. மேலும் கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை – போலீஸ் அகாடெமி சாலை – நல்லம்பாக்கம் சாலை – ஊனமாஞ்சேரி – ஜி.எஸ்.டி சாலை ஊரபாக்கம் வழியாகவும் மற்றும் கூடுவாஞ்சேரி – மாடம்பாக்கம் சாலை – ஆதனுர் நெடுஞ்சாலை முதல் மாடம்பாக்கம் சாலை – யூனியன் சாலை – வண்டலுர் – வாலாஜாபாத் சாலை வழியாகவும் பேருந்துகள் செல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT