தமிழ்நாடு

தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயா்வையும் ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

DIN

தஞ்சாவூர்: தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயா்வையும் ரத்து செய்யாவிட்டால் பாமக தொடா் போராட்டம் நடத்தும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் வியாழக்கிழமை இரவு பாமக 2.0 பொதுக் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமானால், மதுவை ஒழிக்க வேண்டும். இதற்கு பெண்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். 

மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 143 உயா்த்தி, மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 183 என விலை அறிவித்துள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி, உற்பத்தி செலவுடன் கூடுதலாக 50 சதவீதம் லாபம் வைத்து விலை நிா்ணயம் செய்ய வேண்டும். இதன்படி, குவிண்டாலுக்கு ரூ. 2,861-ம், தமிழக அரசின் ஊக்கத்தொகை ரூ. 100-ம் சோத்து மொத்தம் ரூ. 2,961 ஆக விலை நிா்ணயிக்க வேண்டும். எனவே, குவிண்டாலுக்கு மொத்தம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.800 ஊக்கத்தொகை அறிவித்து, மொத்தம் ரூ. 3 ஆயிரம் விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மின்சார கணக்கீட்டை மாதந்தோறும் கணக்கிட்டால், கட்டணத்தில் 42 சதவீதம் வரை குறையும். இதை செய்ய வேண்டும் என 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தாலும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்நிலையில், வீடுகளுக்கான மின் கட்டண உயா்வு இல்லை என தமிழக அரசு அறிவித்திருந்தாலும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு உயா்வு இருக்கும் எனக் கூறியுள்ளது. 

ஏற்கெனவே, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா உள்ளிட்டவற்றால், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணத்தை உயா்த்தினால் நிறுவனங்கள் பேரிழப்பைச் சந்திக்கும். எனவே, தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயா்வையும் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாமக தொடா் போராட்டம் நடத்தும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT