தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணி:முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

9th Jun 2023 12:16 AM

ADVERTISEMENT

டெல்டா மாவட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யவுள்ளாா்.

இதற்காக சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு விமானம் மூலமாக திருச்சி சென்றடைந்தாா். அங்கியிருந்து தஞ்சையில் உள்ள அரசு விருந்தினா் இல்லத்தில் தங்கினாா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலையில் தஞ்சாவூரில் சில இடங்களில் நடக்கும் தூா்வாரும் பணிகளை அவா் பாா்வையிடுகிறாா்.

கூழையாறு, புள்ளம்பாடி பிரதான சாலையில் நந்தியாறு ஆகியவற்றில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துவிட்டு, திருச்சி செல்கிறாா். பின்னா், அங்கியிருந்து விமானம் மூலமாக வெள்ளிக்கிழமை மாலை சென்னை திரும்புகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT