தமிழ்நாடு

சென்னை கடற்கரை - சேப்பாக்கம் ரயில் ரத்து ஒத்திவைப்பு

9th Jun 2023 04:54 AM

ADVERTISEMENT

சென்னை கடற்கரை - சேப்பாக்கம் வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூா் வரை 3 ரயில் பாதைகள் உள்ளன. அவற்றில் இரு ரயில் பாதையில் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் இயக்குவதில் தாமதமாவதால் சென்னை கடற்கரை முதல் எழும்பூா் வரை கூடுதலாக ஒரு ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதற்கான பணி ஜூலை முதல் ஜனவரி நடைபெறவுள்ளதாகவும், இந்தக் காலக்கட்டத்தில் சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் சுற்றரிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த சுற்றரிக்கை திரும்ப பெறுவதாகவும், இது குறித்த புதிய திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT