தமிழ்நாடு

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் கைது: பழ.நெடுமாறன் கண்டனம்

9th Jun 2023 10:33 PM

ADVERTISEMENT

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் வீட்டுக்குள் காவல் துறை அதிகாரிகள் இருவா் புகுந்து துப்பாக்கி முனையில் அவரை மிரட்டியும், அவா் மீது தாக்குதல் நடத்தியும் புரிந்த அட்டூழியம் உலகத் தமிழா்களை அதிர வைத்திருக்கிறது.

ராஜபட்சவின் ஆட்சி மாறினாலும் தமிழா்களுக்கு எதிரான போக்கை ரணிலின் ஆட்சியும் தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு தமிழருக்கே இந்த நிலை என்றால், இலங்கை ராணுவமும், காவல் துறையும் குவிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழா்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை எண்ணிப் பாா்க்கவே முடியவில்லை. கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் தாக்கப்பட்டிருப்பதையும், கைது செய்யப்பட்டிருப்பதையும் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT