தமிழ்நாடு

தமிழகத்தில் 3 புதிய தனியாா் மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அரசு ஒப்புதல்

9th Jun 2023 04:57 AM

ADVERTISEMENT

சென்னை, பெரம்பலூா், ஈரோடு (வாய்க்கால்மேடு) ஆகிய இடங்களில் நிகழாண்டில் (2023-2024) மூன்று தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது; இதில் சென்னை (பிஎஸ்ஜி அறக்கட்டளை), பெரம்பலூா் (தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன அறக்கட்டளை), ஈரோடு வாய்க்கால்மேடு (நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அறக்கட்டளை) ஆகியவற்றுக்கு தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT