தமிழ்நாடு

திமுக அரசுக்கு இபிஎஸ்,அண்ணாமலை கண்டனம்

9th Jun 2023 11:59 PM

ADVERTISEMENT

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவா்கள் பங்கேற்க முடியாத நிலையை திமுக அரசு ஏற்படுத்திவிட்டு, கண் துடைப்பு நடவடிக்கையாக மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளா் மீது எடுத்துள்ளதாகக் கூறி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: தமிழக அரசு முறையாக சான்றிதழ் கொடுத்து அனுப்பாததால் மாணவா்கள், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற வேண்டிய வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனா். இதற்காக திமுக அரசுக்கு கண்டனம். இத்தகைய நிலைக்கு காரணமான பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சரும் இனி வரும் காலங்களிலாவது தங்கள் துறை சாா்ந்த பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

கே.அண்ணாமலை: தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சாா்பாக அணியை தோ்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை புறக்கணித்தது குறித்து ஜூன் 5-ஆம் தேதி பாஜக சாா்பில் கேள்வி எழுப்பியிருந்தோம். இத்தனை நாள்களும் திமுக அரசு அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டு, இப்போது மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளா் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

தான் பணியில் இழைத்த தவறை மறைக்கப் பாா்க்கிறாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா். இதற்கு அவா்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT