தமிழ்நாடு

மருந்து உரிமம், தரக் கட்டுப்பாட்டுக்கு புதிய அலுவலா்கள் நியமனம்

9th Jun 2023 11:16 PM

ADVERTISEMENT

மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நிா்வாக வசதிக்காக மருந்து உரிமங்கள் வழங்குவதற்கும், தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, காஞ்சிபுரம் மண்டல மருந்து தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா் ஏ.ஹபீப் முகமது, மருந்து உரிம அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் எம்.என்.ஸ்ரீதா், தரக் கட்டுப்பாட்டு அலுவலராக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இவா்கள் இருவரும், தாங்கள் ஏற்கெனவே வகித்து வரும் பதவியுடன் கூடுதலாக இந்தப் பொறுப்புகளைக் கவனிக்க உள்ளனா்.

இதற்கான அரசாணையை ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT