தமிழ்நாடு

தருமபுரம் ஆதீனகர்த்தர் தங்க பாத குறடுடன் குருமூா்த்த ஆலயங்களில் வழிபாடு!

9th Jun 2023 01:55 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டண பிரவேசம் விழாவின் முந்தைய நாளான இன்று தருமபுரம் ஆதீனகர்த்தர் தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று ஆதீனங்களின் குருமூா்த்தங்களுக்கு  சென்று வழிபாடு நடத்தினார். 

மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு 1500 ஆண்டுகள்  பழைமைவாய்ந்த ஸ்ரீஞானாம்பிகை உடனுறை சமேத ஞானபுரீசுவரா் சுவாமி கோயில் உள்ளது. 

ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை பட்டடணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், மடத்தில் சித்தியடைந்த முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்கள் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீஆனந்த பரவசர் பூங்காவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

ADVERTISEMENT

ஆதீனத்திற்கு மேற்கு புறத்தில் உள்ள இந்த இடத்திற்கு மேல குருமூர்த்தம் என்று பெயர். தொடர்ந்து இங்கு பூஜை செய்ய, பாரம்பரியமான முறைப்படி கட்டளை தம்பிரான்கள் புடைசூழ, தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருமூர்த்தத்திற்கு எழுந்தருளினார். 

இதனை அடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஒவ்வொரு ஆலயத்திலும் அந்தந்த ஆதீனகர்த்தர்களின் வாழ்க்கை வரலாறு விளக்கிக் கூறப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT