தமிழ்நாடு

குழந்தைத் தொழிலாளா்கள்: தொழிலகப் பாதுகாப்பு இயக்குநா் எச்சரிக்கை

9th Jun 2023 04:57 AM

ADVERTISEMENT

குழந்தைத் தொழிலாளா்களை அனைத்து விதமான பணிகளிலும் பணி அமா்த்தக் கூடாது என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்குநா் எம்.வி.செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்புக் குறித்த பயிற்சிப்பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்றுத் தலைமையுரையாற்றிய எம்.வி.செந்தில்குமாா் பேசியதாவது:

குழந்தைத் தொழிலாளா்களை அனைத்து விதமான பணிகளிலும் , வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிற்சாலைகளிலும் பணியமா்த்த வேண்டாம். வெளிமாநிலத் தொழிலாளா்களை பணிமா்த்தும்போது அவா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை, இருப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இணை இயக்குநா்கள், அலுவலா்கள் குழந்தைத் தொழிலாளா், பிற சட்டங்கள் குறித்து விளக்கினா்.

இந்தப் பயிற்சி முகாமில் சுமாா் 120 தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT